படகோட்டி: யூத விடுதலைப் பயணக் காதல்

6 Sales

299.00

Description

Type: B/W, Paperback

Size: 5X8 (Standard Novel)

Pages: 528

Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure

எகிப்தில் அடிமைகளாயிருந்த இஸ்ரவேலர் விடுதலையடைந்து கானான் என்னும் பிரதேசம் நோக்கிப் பயணிக்கின்றனர். பல காரணங்களால் நாற்பது நாளில் அடையவேண்டிய பகுதியை நாற்பது வருடங்களில் அடைகின்றனர். கானானை அடையுமுன் மோசே மறைந்துபோக படைத்தளபதியாகிய யோசுவா தலைமையேற்று வழி நடத்துகிறார். அவரின் படைத்தலைவர்களுள் ஒருவனாகிய கட்டிளங்காளை எஷூரன் நடக்கும் பல போர்களில் சாதனை புரிகிறான். வழியில் நடந்த அர்னோன் போரில் சிறைப்பாவையான அழகி ஆலியாவை சந்திக்கிறான் காதல் கொள்கிறான். அவளோ வேறு இனத்தை சேர்ந்தவள், வேறு தெய்வத்தை வணங்குபவள். எஷூரனின் கலாச்சாரமும், மதக் கோட்பாடுகளும் அவன் காதலுக்கு அணைபோடுகின்றன. அதே நேரத்தில் இஸ்ரவேலனாகிய எஷூரனின் நம்பிக்கைகளும் நடத்தையும் ஆலியாவைப் பிரிந்துபோய் போர்க்கைதிகள் கூட்டத்தில் சேர வைக்கின்றன

சிறைக் கூடாரத்தில் ஆலியா சந்தித்த ஹக்மா அவளுடைய சொந்தக் கதையை கூறுகிறாள். ஹக்மாவின் கேள்விகளும், நேர்மறையான சிந்தனைகளும் ஆலியாவைப் பாதிக்கின்றன. இதற்கிடையில் எஷூரனின் ஆத்ம நண்பனான சல்மோன் அவனுடைய மனக் குழப்பங்களில் உதவி செய்கிறான். கானான் நாட்டில் வேவு பார்க்கவென்று நுழையும்போது சல்மோன் ஆங்கொரு செப்புச் சிலையிடம் மனதை பறிகொடுக்கிறான்

கடுமையான யூத மதக் கோட்பாடுகளின் நடுவே இவர்களின் காதல் நிறைவேறியதா? ஹக்மாவின் நேர்மறையான நடைமுறைச் சிந்தனை வெற்றி கண்டதா? யோர்தான் வெள்ளத்தில் சிக்கிய இவர்களின் காதலை இவர்கள் நம்பிய இறைவன் படகோட்டியாய் வந்து கரை சேர்த்தாரா? தலைவன் மோசேயை இழந்த யோசுவா இஸ்ரவேலரை அவர்களைத் தங்களுக்கென்று நாடிய நாட்டினில் சேர்த்தாரா? பதில்கள் உங்கள் ரசனைக்கே

Reviews

There are no reviews yet.

Be the first to review “படகோட்டி: யூத விடுதலைப் பயணக் காதல்”