Stephen Dharmaraj (Magudan)

Showing the single result

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஸ்டீபன் தர்மராஜ் (மகுடன்) அவர்கள் மதிப்பிற்குரிய கல்வியாளர். விளையாட்டு, இசை, ஆலயப் பாடகர் குழு, கதைகள் வாசிப்பது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவ கட்டுரைகள் எழுதுதல், தமிழ் கிறிஸ்தவப் பாடல்கள் இயற்றுதல், பாடற்குழுக்களை நடத்துதல், கித்தார் வாசித்தல் ஆகியவற்றை பொழுதுபோக்காகக் கொண்டவர். கிறிஸ்தவ படைப்புகளில் நவீனங்கள் மற்றும் சரித்திர புதினங்கள் அதிகமாக வேண்டும் என்பதை உணர்ந்து, அதன் விளைவாக ஏதாவது விவிலியம் சார்ந்த சரித்திர புதினம் படைக்கவேண்டும் என்ற உந்துதலால் இவர் உருவாக்கியதே படகோட்டி.