புரட்சிக் கனல்

3 Sales

250.00

Description

Type: B&W

Language: Tamil

Size: 5 x 8 (Standard Novel)

Pages: 296

 

புரட்சிக் கனல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், பல ஆண்டுகளாக எண்ணத்தில் இருந்தவை. சில குறிப்புகள் நினைவில் இருந்தவை. இவற்றில் சில வரலாற்றை மையமாகக் கொண்டவை. வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவை சில. செய்தித்தாள்களில் இடம்பெற்றிருந்த நிகழ்வுகளை மையமாக வைத்துப் புனையப்பட்டவை சில. பல ஆண்டுகள் நான் வாழ்ந்தது வடசென்னைப் பகுதி. வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து, அதை அடையாளம் காட்டும் விழாக்கள், போட்டிகள், விளையாட்டுக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை சில.

80 ஆண்டுகள் அகவை நிறையப் பெற்ற நிலையில், இவைகளை எழுத்துருவில் வடிவமைக்க வேண்டும், நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று என் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் விரும்பினர். வற்புறுத்தி வந்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று, எண்ணத்தில் உருவெடுத்த சிறுகதைகளுக்கு எழுத்துருவம் கொடுத்து, சிறுகதைத் தொகுப்பாக புரட்சிக் கனல் என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளேன்.

–  வளவன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “புரட்சிக் கனல்”